தேடல்
Home தமிழீழம் மீட்கப்பட்ட ஆயுதங்களை அழித்துவிடுமாறு முல்லைத்தீவு நீதவான் உத்தரவு

மீட்கப்பட்ட ஆயுதங்களை அழித்துவிடுமாறு முல்லைத்தீவு நீதவான் உத்தரவு

AddThis Social Bookmark Button

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வெள்ளமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றை அழித்து விடுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் 1290 ரீ 56 ரக துப்பாக்கி ரவைகள், 12.7 மி. மீ ரக ரவைகள் 2, 14.5 மி.மீ ரக ரவையொன்று, 82.2 மி. மீ ரக கைக்குண்டுகள் 2, 60 மி.மீ ரக மோட்டார் குண்டு, எல்.ரீ.ரீ.ஈ இனால் தயாரிக்கப்பட்ட 5 கைக்குண்டுகள், 4 ஆர். பி.ஜி. குண்டுகள், 2 பெடல் கன் குண்டுகள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

இவை முல்லைத்தீவு பொலிஸில் கையளிக்கப்பட்டுள்ளதோடு அவற்றை அழிப்பதற்காக நாவற்குளம் விசேட அதிரடிப்படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 
தமிழீழம்
More:
உலகத் தமிழர்
More:
இணைப்புக்கள்
தமிழ்ச் செய்திகள் ஆங்கிலச் செய்திகள் இணைய சஞ்சிகைகள்
தமிழ் பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் இணைய வானொலிகள்