தேடல்
Home தமிழீழம் புதுக்குடியிருப்புப் பகுதியில் 917 பேர் இரு வருடங்களின் பின்னர் மீள்குடியேற்றம்

புதுக்குடியிருப்புப் பகுதியில் 917 பேர் இரு வருடங்களின் பின்னர் மீள்குடியேற்றம்

AddThis Social Bookmark Button

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்புப் பகுதியிலுள்ள வள்ளிபுனம் பிரதேசத்தில் 311 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் நேற்று திங்கட்கிழமை மீள்குடியமர்த்தப்பட்டதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இறுதிக்கட்ட மோதல்களின் போது இடம்பெயர்ந்து செட்டிக்குளம் மெனிக் பார்ம் முகாமில் தங்கியிருந்த இவர்கள், நேற்று  முகாமிலிருந்து அழைத்து வரப்பட்டு மீள்குடியமர்த்தப் பட்டுள்ளனர்.

உடையார்கட்டு பாடசாலையில் தங்கவைக்கப்பட்ட இவர்கள் உரிய பதிவுகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சொந்த வீடுகளில் குடியமர்த்தப்படுவதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

அடுத்தகட்டமாக எதிர்வரும் சில தினங்களில் முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு வடக்கு பிரதேசத்தில் 337 குடும்பங்கள் மீள் குடியமர்த்தப்பட விருப்பதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 24 ஆயிரத்து 624 குடும்பங்களைச் சேர்ந்த 77 ஆயிரத்து 74 பேர் மீள்குடியமர்த்தப்பட்டி ருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், மீள்குடியேற்றம் இடம்பெற்ற பகுதிகளில் பாடசாலைகள், பொது கட்டடங்கள் வைத்தியசாலைகள் என்பன புனரமைக்கப் பட்டிருப்பதுடன், வீதி புனரமைப்பும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இதேவேளை, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட விருக்கும் வீட்டுத் திட்டத்துக்கான இடங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை துப்புரவு படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட வட்டாரங்கள் கூறுகின்றன.

 
தமிழீழம்
More:
உலகத் தமிழர்
More:
இணைப்புக்கள்
தமிழ்ச் செய்திகள் ஆங்கிலச் செய்திகள் இணைய சஞ்சிகைகள்
தமிழ் பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் இணைய வானொலிகள்