Ranjini was found to be a genuine refugee before ASIO decided last week she is a security risk for Australia. But the government won't tell her why, and now she's facing a life in detention.
அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த 2007-ம் ஆண்டு பதவி ஏற்றார். இந்த ஆண்டுடன் அவரது பதவி காலம் முடிவடைகிறது. அதிபர் பதவி ஏற்கும் முன் அவருக்கும் மனைவிக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வெள்ளிக்கிழமை, 18 மே 2012 11:13)
காளி மா பெயரில் பீர் தயாரித்த அமெரிக்க நிறுவனம், இந்து கடவுளின் பெயரை வைத்ததற்காக மன்னிப்பு கோரியுள்ளது. அதுமட்டுமல்லாது இந்த பெயரை மாற்றம் செய்யவும் முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தானில் இரு விமானப்படை விமானங்கள் வீழ்ந்ததால் விமானங்களிலிருந்த விமானிகள் நால்வர் பலியானதுடன் தரையிலிருந்த ஐவர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்தனர்.
வடக்கு நேபாளில் உள்ள ஜோம்சோம் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 21 பேரில் 14 பேர் பலியாகினர். பலியானவர்களில் 13 பேர் இந்தியர்கள் ஆவர்.
மெக்சிகோவில் போதை மருந்து கடத்தல் கும்பல்களிடையே ஏற்பட்ட மோதலில் தேசிய நெடுஞ்சாலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட 49 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 14 மே 2012 20:20)
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சேரிப்பகுதியொன்றில் பாரிய தீ பரவியதால் சுமார் 800 குடிசைகள் அழிந்துள்ளன. இதனால் இருவர் காணாமல் போனதுடன் சுமார் 10,000 பேர் வீடற்றவர்களாகியுள்ளனர்.
இந்தியாவுக்கு வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனின் பாதுகாப்பு முழுவதையும் அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (செவ்வாய்க்கிழமை, 08 மே 2012 06:42)
பிரான்ஸின் புதிய ஜனாதிபதியாக பிரான்சுவா ஹொலண்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாவது கட்ட வாக்களிப்பில் பதவியிலுள்ள ஜனாதிபதியான நிக்கலஸ் சார்கோஸியை இடது சாரி வேட்பாளரான பிரான்சுவா ஹொலண்ட் தோற்கடித்தார்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 07 மே 2012 19:13)
இமயமலைப் பகுதியில் வடமேற்கு நேபாளத்தில் உள்ள பனிமலை ஏரியில் நேற்று திடீரென உடைப்பெடுத்து ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் சார்டிகோலா கிராமத்தை சேர்ந்த 13 பேர் பலியாயினர். 60 பேர் காணாமல் போய் உள்ளனர்.
தென்கொரியாவின் புசான் நகரத்திலுள்ள களியாட்ட விடுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக 3 இலங்கைத் தொழிலாளர்கள் உட்பட 9 பேர் பலியானதுடன், 25 பேர் காயமடைந்துள்ளதாக இன்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.