தேடல்
Home உலகத்தமிழர் தமிழகம் தனது பூகோள அரசியல் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்பட வேண்டும்: ஈழவேந்தன்

தமிழகம் தனது பூகோள அரசியல் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்பட வேண்டும்: ஈழவேந்தன்

AddThis Social Bookmark Button

இந்தியாவின் நலன்களுக்கு எப்போதுமே தமிழீழம் தடையாக இருக்காது என்பதனை எப்போதுமே ஈழவிடுதலைப் போராட்டம வலியுறுத்தி வந்துள்ளது. இன்றைய சூழ்நிலையில், தமிழீழத்தை நாம் வென்றெடுக்க இந்திய மத்திய அரசினை நோக்கியதான ஈழவிடுதலை அரசியலை தமிழகம் முன்னெடுக்க வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதி ஈழவேந்தன் தெரிவித்துள்ளார்.


நாடு.த.அரசாங்கத்தின் முன்னெடுப்புகள் - சனாநாயக செற்பாடுகள் குறித்துரைப்பதோடு, மக்களோடு கருத்துப்பரிமாறும் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, பேராளர் ஈழவேந்தன் ஐயா அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

மக்கள் அரங்கம் நிகழ்ச்சி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (யூன்19) கனடா-ஸ்காபொரொ Scarborough Recreation Centreyல் இடம்பெற்றிருந்தது.

தமிழக அரசினால் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நன்றியோடு எடுத்துரைத்த ஈழவேந்தன் ஐயா அவர்கள், ஈழவிடுதலைக்கான தமிழகத்தின் அழுத்தமான அரசியல் முன்னெடுப்பை, இந்திய மத்திய அரசு தட்டிக்கழிக்க முடியதென குறிப்பி;ட்டதோடு, விழிப்போடு இருப்பதுதான் விடுதலைக்கு கொடுக்கின்ற இன்றைய விலையென்றார்.

நிகழ்வில் கருத்துரைத்த நா.த.அசராங்கத்தின் மக்கள் பிரதிநிதி சாந்தி சிவசோதி அவர்கள், பல்வேறுபட்ட அழுத்தங்கள், நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்களின் ஆதாரவுடன், நிதானமாகவும்-விழிப்பாகவும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அடியெடுத்து வைப்பதோடு தமிழீழம் என்ற உயரிய இலட்சியித்தில் உறுதியாக உள்ளதென இடித்துரைத்தார்.

ஈழவிடுதலைப் பேராட்டத்துக்கான சட்டபூர்வ அங்கீகாரத்தை பெறுவதற்கு, பல்வேறு இராஜதந்திர மட்டங்களில், தொடர்புகளைப் பேணிவருவதோடு மக்களுக்கு விசுவாசமான சனநாய செயற்பாடுகளையும் நா.த.அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் மக்கள் பிரதிநிதி சாந்தி சிவசோதி குறிப்பிட்டார்.
கனடாவின் அனைத்து அரசியல் கட்சிகளது ஆதரவினையும் ஈழவிடுதலைப் போராட்டத்துக்கு திரட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசிய நா.த.அரசாங்கத்தின் தகவல்துறை அமைச்சர் சாம் சங்கரசிவம் அவர்கள், சிறிலங்காப் பொருட்களையும்-சேவைகளையும் புறக்கணிக்கும்  போராட்ட முன்னெடுப்பை உரையில் முன்னிறுத்தினார்.

இதேவேளை வணிகர்களைப் பாதிக்காதவாறு மாற்றுவழிகளைக் கண்டறிவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.  

சிறப்பு பேச்சாளராகக் கலந்து கொண்டு உரையாற்றிய, தமிழ்ப் படைப்பாளிகள் கழகத் தலைவர் நக்கீரன் அவர்கள், பொருள்வளம்-மனிதவளம் எப்போதுமே மட்டுப்படுத்தப்பட்டவை. புலம்பெயர்ந்த தமிழர்களது பொருள்வளம்-மனிதவளம் இதற்கு விதிவிலக்கல்ல. இருப்பினும் எம்மிடம் உள்ள வளங்களை கொண்டு பூகோள அரசியல் அரங்கில் காத்திரமான பங்கை வகிக்கும் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பா போன்ற நாடுகளில் காத்திரமான பொருளாதார  இராசதந்திர அரசியல் பலத்தை கட்டியெழுப்ப வேண்டுமென எடுத்துரைத்தார்.

நிகழ்வின் நிறைவில் மக்களோடு கருத்துப்பரிமாறப்பட்டதோடு மக்களின் கேள்விகளுக்கும் நா.த.அரசாங்கத்தின் பிரதிநிதிகள் பதிலுரைத்தனர்.



இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 27 ஜூன் 2011 07:49)

 
தமிழீழம்
More:
உலகத் தமிழர்
More:
இணைப்புக்கள்
தமிழ்ச் செய்திகள் ஆங்கிலச் செய்திகள் இணைய சஞ்சிகைகள்
தமிழ் பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் இணைய வானொலிகள்